கோத்தகிரி அருகே கோயிலை சேதப்படுத்திய கரடியின் நடமாட்டம் கேமரா மூலம் கண்காணிப்பு

1 month ago 4

 

கோத்தகிரி, பிப்.10: கோத்தகிரி அருகே 2வது முறையாக கோவிலை உடைத்து கரடி அட்டகாசம் செய்த நிலையில், கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தானியங்கி கேமரா மூலம் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோத்தகிரி அருகேயுள்ள கல்லாட கிராமத்தில் முருகன் கோயிலில் அதிகாலையில் கரடி கோவில் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடி உள்ளது.

தொடர்ந்து 2வது முறையாக கரடி கோயில் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடி உள்ளது. இது குறித்து கோத்தகிரி வனத்துறையினரிடம் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவுறுத்தலின்படி கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் மற்றும் வனவர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் கல்லாடா கிராமத்தில் உள்ள கோவிலில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது‌. மேலும் இரவு, பகல் நேரங்களில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

The post கோத்தகிரி அருகே கோயிலை சேதப்படுத்திய கரடியின் நடமாட்டம் கேமரா மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article