கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

2 days ago 2

நாமக்கல், ஏப்.2: நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியது. 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு திடலில், நீச்சல் பயிற்சி குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. வரும் ஜூன் 8ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது. 12 நாள் பயிற்சியில் பங்கேற்க கட்டணமாக ₹1,416 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் 12 நாள் பயிற்சி முகாம், 5 கட்டங்களாக நடைபெறும். வரும் 13ம் தேதி வரை முதற்கட்டமாகவும், வரும் 15 முதல் 27 வரை 2வது கட்டமாகவும், வரும் 29 முதல் மே 11 வரை 3வது கட்டமாகவும், மே 13 முதல் 25 வரை 4வது கட்டமாகவும், மே 27 முதல் ஜூன் 8 வரை 5வது கட்டமாகவும் நீச்சல் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை(74017 03492 என்ற மொபைல் எண்ணில்) தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ₹59 வீதம் செலுத்தி நீச்சல் பயிற்சி பெறலாம் என நாமக்கல் மாவட்ட விளையாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article