ஏன் எனர்ஜி இழக்கிறோம்?
அதிக வியர்வைக் காரணமாக தண்ணீர், உப்பு, மினரல்கள் உப்புகள் (electrolytes) உடம்பில் இருந்து வெளியேறுகின்றன.வெப்பம் (heat exhaustion) காரணமாக உடல் மெதுவாக செயல்படும்.தூக்கமின்மை, உணவுக்குறைவு, வெயிலில் அதிக நேரம் கழிப்பது போன்ற காரணங்களும் இதற்குக் காரணம்.
தீர்வுகள் என்ன?
1. தண்ணீர் மட்டுமல்ல, உப்பும் தேவை!
Electrolyte drinks (ORS, தண்ணீர் + சிறிது உப்பு + சக்கரை + எலுமிச்சை) குடிக்க வேண்டும். சுத்தமான இளநீர் மிகவும் நல்லது.
2. உணவுகள் மூலம் சக்தி பெறலாம்:
தயிர் சாதம், வெள்ளரிக்காய், பனங்கிழங்கு நீர்ச் சத்து நிறைந்த பழங்கள் (தர்பூசணி, திராட்சை, மாம்பழம்) அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இவைகள் உடலை குளிர்ச்சியுடன் வைக்கவும், சக்தியுடன் வைத்திருக்கவும் உதவும்.
3. தூக்கத்தை தவற விடாதீர்கள்:
நீடித்த தூக்கம் இல்லாதவர்கள்தான் அதிகம் சோர்வடைவர். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
4. உணர்வுகள் கூட முக்கியம்:
மனஅழுத்தம், வேலை பளு இவை கூட எனர்ஜியை குறைக்கும். எனவே மன அமைதிக்கான நேரம் (Meditation, walking, music) எடுத்துக்கொள்ளுங்கள்.
5. குளிர்ந்த பானங்கள் ஆனால் கார்பரேட் சோடா அடைத்தது அல்ல!
சர்பத், மோர், இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சைப் பழம் சாறு மாதிரியான இயற்கையான பானங்களைத் தேர்வு செய்யுங்கள். வணிக பானங்களில் அதிக சர்க்கரை, ரசாயனங்கள் இருக்கும். எனவே தவிர்க்கவும்.
வெளியில் செல்லக்கூடாத நேரம்
மத்தியான நேரம் (11.00am 3.30pm)
இந்த நேரம் தான் சூரியன் தலையில் நேராக விழும் நேரம்.
இந்த நேரத்தில்:
வெப்பநிலை அதிகமாக இருக்கும்.UV கதிர்கள் அதிக அளவில் இருக்கக்கூடும்.வெப்ப ஸ்ட்ரோக் (heat stroke) ஏற்படும் அபாயம் உண்டு. உடல் சோர்வு, தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை வரும்.
இந்த 11 மணி முதல் 3.30 மணி வரையான நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தலைக்கவசம், குடை, முகத்தை மறைக்கும் துணிகள் இவற்றை பயன்படுத்தவும். மேலும் தண்ணீர் கேன்கள், மோர் உள்ளிட்டவை வைத்திருப்பதும் நல்லது.
– ஷாலினி நியூட்டன்
The post கோடைகால எனர்ஜி இழப்பு…தவிர்ப்பது எப்படி ? appeared first on Dinakaran.