
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இன்று முதல் (மே 9) படகு சேவை காலை 7 மணிக்கு தொடங்கும் என்று பூம்புகார் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு படகு சேவை தொடங்கியது.