கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் அரசு உதவிபெறும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

14 hours ago 2

*ரூ.36 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுத்தனர்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் கிராமத்தில் முன்னாள் மாணவர்கள் படித்த பள்ளிக்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுத்து அவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளத்தில் வேங்கடேஸ்வரா மேல்நிலை அரசு உதவி பெறும்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக ரூபாய் 36 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி நேற்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும் இப்பள்ளியில் 45 வருடங்களுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

இவர்களில் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வும் பெற்றுள்ளனர். அவர்கள் கடந்த கால இன்ப துன்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அவர்கள் கூறுகையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு சார்பாக நிதி திரட்டி பள்ளி வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் என்றனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் அரசு உதவிபெறும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Read Entire Article