கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 weeks ago 4

சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது. 3 கோடி செலவில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ.80.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 பன்னோக்கு மைய கட்டடங்கள் திறக்கப்பட்டது. மகளிர் உடற்பயிற்சிக்கூடம், நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாடினார்.

ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. கோ ஒர்கிங் ஸ்டேஷன் எனப்படுகின்ற பணி செய்வதற்கான தளம் உள்ளது..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் தன்னுடைய சொந்த முயற்சியால் அத்தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ஏற்கனவே கணினி பயிற்சி வகுப்பு. மறைந்த அனிதாவின் நினைவாக அவரது பெயரிலேயே துவங்கப்பட்டு முழுக்க பெண்களுக்கென்று தனியாக ஒரு கணினி மையத்தை கட்டணமில்லா பயிற்சி மையத்தை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் ஆண்களுக்கு என்று கட்டணம் இல்லாமல் கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார். தையல் பயிற்சிக் கூடத்தை கட்டணம் இல்லாமல் உருவாக்கினார். இந்த மூன்று பயிற்சிக் கூடத்தில் பயலுகின்ற மாணவச் செல்வங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் அவர்கள் பயிற்சி முடித்த பிறகு கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும், Tally தேர்வுக்குண்டான கட் டணத்தையும் தானே தன் சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அந்தப் பயிற்சிகளை முடித்ததற்கான சான்றிதழ்களும், மடிக்கணினியும் கட்டணம் இல்லாமல் வழங்கி கொண்டு வருகின்றார்

அதேபோல் தையல் பயிற்சி முடித்தவர் களுக்கும் தையல் பயிற்சி முடிவுற்றபிறகு அவர்களுக்கு பல்வேறு பரீட்சைகள் வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும், அதேபோல் இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்படுகின்றது.

105 பேருக்கு கணினி!

360 பேருக்கு தையல் இயந்திரம்! 13வது நிகழ்வாக அதாவது 13வது பேட்ச்சாக இன்று அதில் பயிற்சி முடித்தவர்களுக்கு கணினி வழங்கினார். 105 பிள்ளைகளுக்கு கணினியும், 360 பிள்ளைகளுக்கு தையல் இயந்திரமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்குகினார்

இலவச கண் சிகிச்சை முகாம்!

அதோடு முதல்வர் அவர்கள் இலவசமாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை மையத்தை தொடங்கினார். அந்த இலவச கண் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கண் குறைபாடு உள்ளவர்களுக்கு எந்த விதமான கட்டணமும் இல்லாமல் மூக்கு கண்ணாடி மற்றும் புத்தாடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கண்புரை அறுவை சிகிச்சை என்பது கட்டணம் இல்லாமல் சொந்த ஏற்பாட்டில் அகர்வால், சங்கர நேத்ராலயா போன்ற உயர்தர மருத்துவ மனைகள் மூலமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன.

The post கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article