சென்னை: கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு வருமானம் ஈட்டும் வகையில் அந்த நிலத்தில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரியும், அங்கு வசிப்பவர்களை வாடகைதாரர்களாக கருதக் கோரியும் சிவராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.