கொல்லிமலை வனப்பகுதியில் டிரோன் கேமராவில் படம் பிடித்த 2 பேருக்கு அபராதம்

3 weeks ago 5

சேந்தமங்கலம்: கொல்லிமலை வனப்பகுதியை, டிரோன் கேமராவில் படம் பிடித்த 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலத்திற்கு, தினமும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், காப்புக்காடு பகுதிகளில் டிரோன் கேமராவில் படம் பிடிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று முன்தினம் வனத்துறையினர், பிரதான மலைச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 50வது கொண்டை ஊசி வளைவுயில், 2 பேர் டிரோன் கேமராவில் வனப்பகுதியை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த வனத்துறையினர், அவர்களை மடக்கி கேமராவை பிடுங்கி அதன் பதிவுகளை அழித்தனர். விசாரணையில், நாமக்கலை சேர்ந்த ஹரி, கிஷோர் குப்தா என்பது தெரியவந்தது. இருவருக்கும் தலா ரூ.2,500 அபராதம் விதித்தனர். இதுகுறித்து வனச்சரகர் சுகுமார் கூறுகையில், ‘கொல்லிமலை பிரதான மலைச்சாலை பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு பகுதியாகும். இதனை டிரோன் கேமராவில் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் மது அருந்தவும், புகை பிடிக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்,’ என்றார்.

The post கொல்லிமலை வனப்பகுதியில் டிரோன் கேமராவில் படம் பிடித்த 2 பேருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article