
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.
18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்த குறைந்தபட்ச ரன் இதுவாகும்.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ரன்களை பதிவு செய்த 2-வது அணி என்ற மோசமான சாதனையையும் சென்னை படைத்துள்ளது. இதில் பெங்களூரு அணி 2019-ம் ஆண்டு சென்னைக்கு எதிராக 70 ரன்களில் ஆல் அவுட் ஆனதே முதலிடத்தில் உள்ளது.
சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா களமிறங்கி உள்ளது.