கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உள்ள தொடர்பு உறுதி - சி.பி.ஐ.

3 months ago 26
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. சியால்டா நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்ற சஞ்சய் ராய், தமக்கும், கொலைக்கும் தொடர்பில்லை என்றார். ஆனால் பெண் மருத்துவரின் உடலில் சஞ்சய் ராயின் உமிழ்நீர் படிந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் கிடைத்த சஞ்சய் ராயின் முடி, உடை, காலணியில் படிந்திருந்த பெண் மருத்துவரின் ரத்தக்கறை மற்றும் டி.என்.ஏ சோதனை முடிவு உள்ளிட்டவை அவருக்கு கொலையில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read Entire Article