கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: மூத்த மருத்துவர்கள், பணியாளர்கள் கூண்டோடு ராஜினாமா

3 months ago 17

கொல்கத்தா: 10 கோரிக்கைகளை முன்வைத்து தர்மதாலாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 40-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் இன்று (அக்டோபர் 8) ராஜினாமா செய்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த வெகுஜன இராஜினாமா மேற்கொள்ளப்படுவதாக இன்று இராஜினாமா செய்த டாக்டர் சிரேஷ்ட தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்கள், தங்களது கோரிக்கைகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி அக்டோபர் 5-ம் தேதி சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உறுதியளித்தபடி தங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற 24 மணி நேர காலக்கெடுவை நிர்ணயித்து, தர்மதாலாவில் உள்ள டோரினா கிராசிங்கில் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

மாநில அரசு காலக்கெடுவைத் தவறிவிட்டது, எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறோம். வெளிப்படைத்தன்மையைக் காக்க, தாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் மேடையில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதை எடுத்துரைத்ததுடன் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 40க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் வெகுஜன ராஜினாமா செய்தனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மேற்கு வங்க அரசை வலியுறுத்தினர்.

The post கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: மூத்த மருத்துவர்கள், பணியாளர்கள் கூண்டோடு ராஜினாமா appeared first on Dinakaran.

Read Entire Article