கொல்கத்தா – லக்னோ போட்டி தேதி மாற்றம்

3 days ago 3

ஐபிஎல் தொடரில், வரும் ஏப்.6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, கொல்கத்தா- லக்னோ இடையிலான டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்று ராம நவமி தினமாக இருப்பதால் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்வலங்கள் நடைபெறும் எனவும் அதனால், போட்டி நடத்துவதற்கு தக்க பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்த போட்டி, வரும் ஏப். 8ம் தேதி, பிற்பகல், 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டி நடக்கும் இடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

The post கொல்கத்தா – லக்னோ போட்டி தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article