திண்டுக்கல்லில் கொலை வழக்கில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை எடுத்துத் தருவதாகக் கூறி காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற நபரை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
இர்பான் என்பவர் கடந்த சனியன்று வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ரிச்சர்ட் சச்சின் என்பவர் வியாழன்று கைது செய்யப்பட்டார்.
கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை மாலைப்பட்டி சுடுகாடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்ட் தெரிவித்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரை அதிகாலை நேரத்தில் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வெட்டியதில் காவலர் அருணுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக, ஆய்வாளர் வெங்கடாசலபதி தற்காப்பிற்காக ரிச்சர்ட்டின் வலது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.