கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மீட்பு குடியாத்தம் அருகே விவசாய பண்ணையில்

3 hours ago 1

 

குடியாத்தம், மே 10: குடியாத்தம் அருகே விவசாய பண்ணையில் கொத்தடிமையாக சிக்கி அவதிப்பட்டு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2 மனைவிகள் மற்றும் 8 குழந்தைகளுடன் ஒருவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த புட்லவாரிப்பல்லி கிராமத்தில் விவசாய பண்ணைக்கு வேலைக்காக வந்தனர். அங்கு வட்டிக்கு கடன் பெற்ற அவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல், அங்கேயே குழந்தைகளுடன் விவசாய வேலை செய்யும் கொத்தடிமைகளாக மாறினர்.
இதுதொடர்பாக கலெக்டர் சுப்புலட்சுமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் மெர்லின் ஜோதிகா மற்றும் வருவாய்த்துறையினர் புட்லவாரிப்பல்லி கிராமத்திற்கு சென்று அவர்களை மீட்டு மாவட்ட மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு குடியாத்தம் தொண்டு நிறுவனம் சார்பில் புதிய ஆடைகள், உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோயில் அறங்காவலர் பொன்னம்பலம் வழங்கினார். அப்போது சமூக ஆர்வலர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மீட்பு குடியாத்தம் அருகே விவசாய பண்ணையில் appeared first on Dinakaran.

Read Entire Article