கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது

6 months ago 37
கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் பசு மாடுகளை கடத்தி சென்று இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த புகாரில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். செல்லத்துரை என்பவர் மேய்ச்சலுக்கு சென்ற தமது பசுமாடு காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வேகமாக ஓடும் பசு மாட்டின் கயிற்றை பிடித்தபடி இருவர் செல்வது தெரியவந்தது.  மாட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது அசாருதீன்மற்றும் அவரது உதவியாளர் மருதுவும் சினை மாடுகளை இறைச்சிக்காக கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
Read Entire Article