கொடைக்கானலில் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் இயக்குநர் ஆய்வு

1 month ago 3

 

கொடைக்கானல், பிப். 10: கொடைக்கானல் நகராட்சி பகுதிகளான கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்தும் பணி, ஏரிச்சாலையை சுற்றி நடைபாதை மேம்படுத்தும் பணி போன்றவை ரூ.10 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலை பகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை அமைக்கும் பணி நடக்கிறது. மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நகராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்யநாதன், பொறியாளர் (பொறுப்பு) செல்லத்துரை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

The post கொடைக்கானலில் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article