கொடைக்கானல், டிச. 31: கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளிலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத்தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இதற்கிடையே, மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும். இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இங்குள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று பல்வேறு இடங்களில் நடனம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கிறது. இவற்றில் சுற்றுலா பயணியர் அதிகம் பங்கேற்பர். இதேபோல் கொடைக்கானலில் உள்ள இந்திய பெந்தகோஸ்தே தேவ சபையின் ஆலயம், சிஎஸ்ஐ தேவாலயம், ஆரோக்கிய அன்னை தேவாலயம், புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்டவை அலங்கார மின்விளக்குகளில் ஜொலிப்பதுடன், நள்ளிரவு திருப்பலி, சிறப்பு வழிபாடுகளுக்கு தயாராகி வருகின்றன.
The post கொடைக்கானலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்கு தேவாலயங்கள் தயார் appeared first on Dinakaran.