கொடைக்கானலில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு

3 months ago 24

கொடைக்கானல், செப். 29: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர் .இந்நிலையில் நேற்று கொடைக்கானலுக்கு கொடைக்கானலுக்கு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்களான சேலம் எம்எல்ஏ அருள், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, வானூர் எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் மட்டும் வந்திருந்தனர். கொடைக்கானல் பூம்பாறை மலை கிராம பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியினை பார்வையிட்ட சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். நேற்று மாலை கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இவர்களுடன் கொடைக்கானல் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

The post கொடைக்கானலில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article