கொடைக்கானல், ஏப். 9: கொடைக்கானலில் கைப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. திமுக முன்னாள் அவைத்தலைவர் அகத்தீஸ்வரன் நினைவு சுழற் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ் மலைப் பகுதிகளை சேர்ந்த 20 கைப்பந்து அணிகள் பங்கு பெற்றது. இறுதிப்போட்டிக்கு கூக்கால் அணியும், புதுப்புத்தூர் அணியும் தேர்வாகின. இதில்கூக்கால் கைப்பந்து அணி அகத்தீஸ்வரன் நினைவு சுழற் கோப்பையை கைப்பற்றியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கைப்பந்து போட்டிகளை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லதுரை, துணைதலைவர் மாயக்கண்ணண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் பரிசுகள் வழங்கினார் இந்த பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் தங்கராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் இளங்கோ, ஜெயராமன், கீஸ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொறியாளர் ரஞ்சித், கணேசன், சங்குமுருகன், மலர்ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கொடைக்கானலில் கைப்பந்து போட்டி கூக்கால் அணி வெற்றி appeared first on Dinakaran.