கொடைக்கானலில் களைகட்டுது கோடை `சீசன்’: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

1 week ago 3


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள, `மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானல் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். நீதிமன்ற உத்தரவுப்படி, இங்கு இ-பாஸ் நடைமுறை, வாகன கட்டுப்பாடு அமலில் உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையிலும், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிதமான அளவிலேயே இருந்தது. இந்நிலையில், கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இதமான கால நிலை நிலவுகிறது. வழக்கமாக வார இறுதி நாட்களில்தான் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

ஆனால் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் வார நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், குணா குகை, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை பார்த்து ரசிக்கின்றனர். மேலும் பலர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடைக்கானலில் களைகட்டுது கோடை `சீசன்’: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article