கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

2 months ago 20

*வனத்துறையினர் கவனிப்பார்களா?

கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டு மாடுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொடைக்கானல் முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும். இங்கு முக்கிய தொழில் விவசாயம் .இதனால் கொடைக்கானல் எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும். இந்த விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.

கொடைக்கானலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு மாடுகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. முன் காலங்களில் காட்டு மாடுகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள்,குடியிருப்புகள்,வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

சமீபகாலமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில், காட்டு மாடுகள் அவ்வப்போது வந்து அட்டகாசம் செய்து வருகிறது. பொது மக்களை விரட்டியும் சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தியும் வருகிறது. கடந்த மாதத்தில் மூவர் காட்டு மாடு தாக்கியதில் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று நண்பகல் வேளையில் நாயுடுபுரம் செல்லும் சாலையில் டிப்போ பகுதியில் காட்டு மாடுகளின் கூட்டம் ஒன்று சர்வ சாதாரணமாக நடமாடியது. அங்கிருந்த பொது மக்களையும் விரட்டியது. இதனால் உயிருக்கு அஞ்சிய அவர்கள் தங்கள் வந்த வாகனத்தை கூட விட்டுவிட்டு தப்பியோடி உயிர் பிழைத்தனர். வனத்துறையினர் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள் appeared first on Dinakaran.

Read Entire Article