கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமலில் இருக்கும்: சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி பேட்டி

3 months ago 18

திண்டுக்கல்: கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். இ-பாஸ் முறை சிறப்பாக சென்று கொண்டிருப்பதாக சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இ-பாஸ் பதிவு செய்துவிட்டு வராமல் இருந்தால் அது பற்றியும் தொலைபேசியில் அழைத்து கேட்கிறோம். இதுவரை இ-பாஸ் பதிவு செய்தவர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். இ-பாஸ் பதிவு செய்துவிட்டு, பலர் வருவதில்லை; இதனால் இ-பாஸ் கணக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

The post கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமலில் இருக்கும்: சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article