கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திய 3 இளைஞர்கள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

3 months ago 15

பெரம்பூர், அக்.14: கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரசாந்த் (26), ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு, கொடுங்கையூர் எழில் நகர் தண்டவாளம் அருகே, கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (20, ஒன்றாவது தெருவை சேர்ந்த நிதிஷ்குமார் (22) உள்ளிட்ட 6 பேருடன் போதை ஊசியை உடலில் செலுத்தியுள்ளார்.

பின்னர், அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பிரசாந்த் உடல்நிலை மோசமடைந்ததால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதேபோல், ராஜேஷ் நேற்று அதிகாலை 4 மணியளவிலும், நிதிஷ்குமார் நேற்று காலை 7 மணிக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, இவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திய 3 இளைஞர்கள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article