கைவிடப்படுகிறதா இளையராஜா பயோபிக் படம் ?

2 months ago 15

சென்னை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவா நடிக்க இருந்தார். படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருந்தார். இளையராஜாவும், மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போவதாக விழா ஒன்று நடைபெற்றது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

 இந்தநிலையில், தற்போது இப்படம் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இளையராஜாவின் பயோபிக் படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனென்றால் மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு ஒத்து வராது என படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படம் கைவிடப்படுமா? அல்லது வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறப்படுமா? என்று தெரியவில்லை. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article