கையில் கற்பூரம் ஏந்தி ரஜினியை வரவேற்ற ரசிகர்

4 hours ago 3

பாலக்காடு,

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இதையடுத்து படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் காரில் நின்றபடி மெதுவாக சென்று கொண்டிருந்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாகினர். ‛‛தலைவா.. தலைவா.. '' என்று கோஷமிட்டனர். ரசிகர்களை நோக்கி சிரித்தப்படி ரஜினிகாந்த் கைகளை அசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்நிலையில் ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் வெறும் கையில் கற்பூரம் ஏந்தி ரஜினியை வரவேற்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article