கேஸ் சிலிண்டர் புதுசு மாற்றும்போது கவனிக்க வேண்டியவை!

2 months ago 10

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

*பழைய சிலிண்டர் தீர்ந்து புதியதை மாட்டும் போது, எல்லா விளக்குகளையும் அணைத்து விட வேண்டும். ஊதுவர்த்தி கூட இருக்கக் கூடாது. கெரோசின் ஸ்டவ், இன்டக்‌ஷன் ஸ்டவ், ஹாட்பிளேட் இவற்றையும் அனைத்து விட வேண்டும்.

*கேஸ் அடுப்பு ஸ்விட்ச், சிலிண்டர் வால்வ் இரண்டையும் முடிவிட வேண்டும்.

*சிலிண்டரின் மூடியை திறக்கும் போது மர சுத்தியலைத்தான் பயன்படுத்தல் பாதுகாப்பு. இரும்பு கத்தி கூடாது.

*பழைய சிலிண்டரின் ட்யூபை பிரித்து எடுக்கு முன் புதிய சிலிண்டரை திறக்கக் கூடாது.

*புது சிலிண்டரைப் பொருத்தியதும், எங்காவது கசிவு இருக்கிறதா? கேஸ் வாடை வருகிறதா என்பதை கவனிப்பது பாதுகாப்பானது.

*சிலிண்டர் மாற்றும் போது கவனமாக இருந்தால் பாதுகாப்பு கிடைக்கும். கேஸ் செலவும் மிகக் குறையும்.

கேஸ் பயன்படுத்துவதில் சிக்கனம்…

*சமைக்க வேண்டிய பொருட்களை தயாராக வைத்துக் கொண்ட பிறகே கேஸ் அடுப்பை பற்றவைக்க வேண்டும். கேஸ் அனாவசியமாக எரிவதைத் தவிர்க்கவும். செலவு குறையும்.

*கேஸ் அடுப்பு ஜ்வாலை பச்சை கலந்த நிறத்தில் எரிந்தால்தான், கேஸ் அதிகம் செலவாகாது. சிவப்பு நிறத்தில் எரிந்தால் செலவு கூடும்.

*அகன்ற, வட்டமான பாத்திரங்கள் பயன்படுத்தினால் செலவு குறையும்.

*தேவைக்கேற்ப அளவான நீரைப் பயன்படுத்தினால் கேஸ் செலவு குறையும்.

*மூடி போட்டு சமைத்தால் சீக்கிரம் வெந்து விடும். செலவும் குறையும்.

*பர்னர், அடுப்பு, ட்யூப் போன்ற வற்றை அடிக்கடி சுத்தம் செய்து விட்டால் கேஸ் செலவு குறைவு.

தொகுப்பு: எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.

The post கேஸ் சிலிண்டர் புதுசு மாற்றும்போது கவனிக்க வேண்டியவை! appeared first on Dinakaran.

Read Entire Article