கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

1 month ago 9

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே காதல் பிரச்னையில் பெண் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொரடாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகள் குமுதி குஸ்மா (23). இவர், கேளம்பாக்கம் அருகே சிறுசேரி மென்பொருள் பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஏகாட்டூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரீத்தி, ேஹமலதா ஆகியோருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வரை அனைவரும் பேசிவிட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் தண்ணீர் குடிக்க பிரீத்தி எழுந்தார். அப்போது, பக்கத்து படுக்கையில் தூங்கிய குமுதி குஸ்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அலறியடித்து கூச்சலிட்டார்.

உடனே ஹேமலதாவும் எழுந்தார். இருவரும் சத்தம் போட்டபடி வெளியில் ஓடி வந்து விடுதி நிர்வாகியிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து குமுதி குஸ்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமுதி குஸ்மாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் குமுதி குஸ்மா கடந்த சில மாதங்களாக ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரிடம் தினமும் நீண்ட நேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. காதலில் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article