கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகாத ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர் வேதனை

3 weeks ago 4

புதுடெல்லி: நடப்பாண்டில் பாரீசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கரின் பெயர் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் தனி நபர் பிரிவிலும் மிக்சட் 10 மீட்டர் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீராங்கனை மனு பாக்கர் (22). நாடு சுதந்திரம் அடைந்த பின், ஒலிம்பிக்கில் ஒரே ஆண்டில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை இவரே.

இந்நிலையில், கேல் ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளியானது. இதில் பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், அவர் கடும் வருத்தத்தில் உள்ளதாக அவரது தந்தை ராம் கிஷண்பாக்கர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மனு பாக்கரின் முயற்சிகளையும் சாதனைகளையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். கேல் ரத்னா விருதுக்கு தன் பெயர் தெரிவு செய்யப்படாததால் அவர் மனதளவில் நொறுங்கிப் போய் உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கவே கூடாது என அவர் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். கேல் ரத்னா விருதுக்காக அரசின் இணையதளத்தில் மனு பாக்கர் விண்ணப்பித்திருந்தார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2021ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர், பதக்கங்கள் வென்ற பெரும்பாலான வீரர், வீராங்கனைகளுக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மனு பாக்கர் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர் கேல் ரத்னாவுக்கு தெரிவு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகாத ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article