கேரளாவில் மீண்டும் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி... எச்சரிக்கை ஒலியால் தப்பியோடிய கொள்ளையர்கள்

3 months ago 28
திரிச்சூரில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியவர்கள் தமிழகத்தில் பிடிபட்ட சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட கடக்காத நிலையில், ஆலப்புழா அருகே ஒரு ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். வள்ளிக்குந்தம் பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மிற்கு நேற்று நள்ளிரவு சென்ற நபர் எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், அப்போது அலாரம் அடித்ததால் அந்நபர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். வங்கி அளித்த புகாரின் பேரில் கைரேகைகளை சேகரித்து, சி.சி.டி.வி உதவியுடன் கொள்ளையனை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article