கேரளாவில் புதிய ஆளுநர் பதவி ஏற்றார்

3 weeks ago 4

திருவனந்தபுரம்: கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான் பீகார் ஆளுநராகவும், பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள ஆளுநராகவும் அண்மையில் மாற்றப்பட்டனர். இந்நிலையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கேரள ஆளுநராக நேற்று பதவி ஏற்றார். காலை 10.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கேரள உய ர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் மதுக்கர் ஜாம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஷம்சீர், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரம் வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் அவரது மனைவி அனகா அர்லேக்கர் ஆகியோருக்கு விமானநிலையத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post கேரளாவில் புதிய ஆளுநர் பதவி ஏற்றார் appeared first on Dinakaran.

Read Entire Article