திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்தனம்திட்டாவைச் சேர்ந்த நிகில், அனு இருவரும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு மலேசியா சென்ற தம்பதியினர், இன்று அதிகாலை திருவனந்தபுரம் திரும்பியுள்ளனர். புதுமண தம்பதியை பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் காரில் அழைத்து வந்துகொண்டிருந்தனர். பத்தனம்திட்டாவில் கோநி என்ற இடத்தில் கார் வந்தபோது எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் பிஜு ஜார்ஜ், மத்தாய் ஆகியோர் உயிரிழந்தனர்.
The post கேரளாவில் நடந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.