கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு

3 months ago 22

வேலூர்: திருநெல்வேலியை சேர்ந்தவர் ரவுடி எஸ்டேட் மணி(40). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு, சிறையில் சோதனை செய்ய வந்த காவலர்களிடம் ஒத்துழைப்பு வழங்காமல் எஸ்டேட் மணி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் ஜெஎம்1 கோட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த எஸ்டேட் மணி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 2202ம் ஆண்டு கோர்ட் வாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மூணாறில் பதுங்கி இருந்த எஸ்டேட் மணியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதையடுத்து, பாகாயம் போலீசில் மணி மீது வழக்கு நிலுவையில் உள்ளதாலும், கோர்ட் வாரண்டு பிறப்பித்திருந்ததாலும் எஸ்டேட் மணியை தனிப்படை போலீசார், பாகாயம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் நேற்று எஸ்டேட் மணியை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். வரும் 3ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article