கேரளாவில் கார்- பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி

6 months ago 25

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குடும்பத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் விசாரணையில் புதுமண தம்பதிகள் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. புதுமண தம்பதிகள் பெயர் நிகில், அனு என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article