கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

6 months ago 22

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் இருந்து மினிபஸ் மூலம் சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர்கள், தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆரியங்காவு சோதனைச் சாவடி அருகே சரக்கு லாரி ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக மினிபஸ் மோதி விபத்து ஏற்பட்டது.

அதிகாலை 4.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், 46 வயதான பக்தர் ஒருவர் உயிரிழந்தார். அந்த பேருந்தில் மொத்தம் 24 பேர் இருந்த நிலையில், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து தென்மலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article