கேரளா: பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவுக்காக 9-ந்தேதி 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தம்

2 months ago 14

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் 'ஐப்பசி ஆறாட்டு' மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி விழா ஆகிய புனித நிகழ்வுகளுக்காக, கோவிலின் அருகில் அமைந்திருக்கும் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு, விமான இயக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

அந்த வகையில் பத்மநாப சுவாமி கோவிலில் வரும் 9-ந்தேதி 'ஐப்பசி ஆறாட்டு' விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து சாமி சிலைகளை சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து சென்று அங்கு ஆறாட்டு நிகழ்ச்சி (புனித குளியல்) நடத்தப்படுகிறது. இந்த சாமி ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையை கடந்து கடற்கரைக்கு செல்லும்.

இந்நிலையில், பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவுக்காக வரும் 9-ந்தேதி 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் என திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவித்து உள்ளது. இதன்படி 9-ந்தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article