
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் போஸ் (வயது 55) அவரது மனைவி ரீனா (48). சம்பவத்தன்று இருவரும் முல்லக்கணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினர். பன்னியர்குட்டி தேவாலயம் அருகே உள்ள குறுகிய, செங்குத்தான சரிவான சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது. இதில் காரில் சென்ற 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தம்பதி இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த ஆபிரகாம் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.