கேரளா: எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் பலி

2 months ago 12

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் - டெல்லி இடையே கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டுகிறது. இந்த ரெயில் இன்று டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், மாலை 3.05 மணியளவில் சோரனூர் பாலத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, சோரனூர் ரெயில்வே பாலத்தில் ரெயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ரெயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார், உயிரிழந்த 3 பேரிடன் உடலைகளையும் மீட்டுள்ளனர். ஆனால், ரெயில் மோதியதில் பாரதபுலா ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மற்றொரு ஊழியரின் உடலை தேடி வருகின்றனர்.

ரெயில் மோதியதில் உயிரிழந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மை பணியாளர்களும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read Entire Article