கேரள ரயில் விபத்தில் இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

4 months ago 23

சென்னை: கேரளாவில் ரயில் பாதை சுத்தம் செய்யும் பணியின் போது, ரயில் மோதி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், பாலக்காடு ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் கடந்த நவ.2ம் தேதி பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில், ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் இருந்த, சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அ.லட்சுமணன் (55), அவரது மனைவி வள்ளி (45), காரைக்காடு, டி.பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த ரா.லட்சுமணன் (45), அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

Read Entire Article