கேரள சட்டப்பேரவையில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதிகேட்டு தீர்மானம்

4 months ago 18

திருவனந்தபுரம்: வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் இதுவரை ஒன்றிய அரசு கேரளாவுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கக் கோரி 275 பிரிவின்படி கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமைச்சர் ராஜேஷ் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியது: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைபிரதமர் மோடி பார்வையிட்ட போதும், ஒன்றிய அரசு இதுவரை எந்த நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை. கேரளாவுக்கு இதுவரை நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கேரள சட்டப்பேரவையில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதிகேட்டு தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article