"கேம் சேஞ்சர் படம் மதுரை ஆட்சியரின் கதை" - நடிகர் எஸ்.ஜே.சூர்யா

5 hours ago 3

சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் , கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் கேம் சேஞ்சர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேம் சேஞ்சர் படம் மதுரையைச் சேர்ந்த ஆட்சியரின் உண்மையான கதை எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"கேம் சேஞ்சர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அவுட்லைன். மதுரை ஆட்சியரின் உண்மையான வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து அவர் எழுதி இருந்ததை நாம் ஆந்திராவில் நடக்கும்படியாக மாற்றியுள்ளோம். படம் அருமையாக வந்துள்ளது. ஒரு அரசியல்வாதிக்கும் ஆட்சியருக்கும் நடக்கும் போர்தான் கதை" என்றார்.

Our Thalaivar @iam_SJSuryah wishing #GameChanger for the great Success in #TamilNadu Get ready for the Blockbuster Pongal #GameChangerOnJAN10 Global Star @AlwaysRamCharan @shankarshanmugh @advani_kiara @kbsriram16 @SVC_official pic.twitter.com/AHnw93omyI

— RockFort Entertainment (@Rockfortent) January 9, 2025
Read Entire Article