சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையாகம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017 – 22ம் ஆண்டு வரையிலான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது என அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் அபராதத்துடன் ரூ.570 கோடி கேட்பதாக அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜிஎஸ்டி வரி ரூ. 285 அபராதத்துடன் சேர்த்து ரூ. 570 கோடி செலுத்தும்படி அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
The post கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையாகம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை..!! appeared first on Dinakaran.