
சென்னை,
சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் வடிவேலு பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். குறிப்பாக பெண் வேடமிட்டும் நடித்துள்ளார். இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இப்படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், 'கேங்கர்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அவினி சினிமாக்ஸ் நடிகை கேத்ரின் தெரசாவின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.