கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கடம்பத்தூர் ஏரிக்கு உபரிநீர் திறப்பு

1 day ago 1

 

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆறு உருவாகிறது. இந்த கொசஸ்தலை ஆறு செல்லும் பாதையில் கேசாவரம் என்ற பகுதியில் அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் 16 ஷட்டர்கள் அமைத்து பாதி கொசஸ்தலை ஆறுக்கும், பாதி கூவம் ஆறுக்கும் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் கேசாவரம் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. அந்த நீர் 5 ஷட்டர் வழியாக 300 கன அடி வீதம் புதுமாவிலங்கை அணைக்கட்டு வழியாக செல்லக்கூடிய வாய்க்கால் மூலமாக கசவ நல்லாத்தூர் ஏரி, கடம்பத்தூர் ஏரி, அகரம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது.

மேலும், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர் காதம்பரி ஆகியோர் நீர்வளத்துறை மூலம் கடம்பத்தூர் ஏரிக்குச் செல்லும் கால்வாயை சுத்தம் செய்து, மழைநீரை சிறிது கூட வீணாக்காமல், தொடர் நடவடிக்கை மேற்கொண்டதால் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயத்தையே நம்பியுள்ள அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கடம்பத்தூர் ஏரிக்கு உபரிநீர் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article