சென்னை: சென்னை கேகே நகரில் தவெக வட்டச் செயலாளர் அய்யப்பன் மீது தாக்குதல் நடத்திய ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் நேற்று திடீரென அய்யப்பனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். தாக்குதல் நடத்திய ராமாபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி முத்துஜா அகமது, சாம் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் ரவுடி முத்துஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அய்யப்பனை தாக்கியதாக தகவல் கூறப்படுகிறது.
The post கேகே நகரில் தவெக வட்டச் செயலாளர் அய்யப்பன் மீது தாக்குதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.