`கெட் அவுட் ரவி’: ஈரோடு, திருச்சி, விழுப்புரத்தில் போஸ்டர்

4 months ago 14

ஈரோடு: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஈரோடு, திருச்சி, விழுப்புரத்தில், `கெட் அவுட் ரவி’ எனும் ஹேஷ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் இந்தச்செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாகவும், சிறுபிள்ளைத்தனமான செயலாகவும் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஈரோடு, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளில் ‘கெட் அவுட் ரவி’ எனும் ஹேஷ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் “தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர், அவரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி” எனும் வாசகம் இடம்பெற்று இருந்தது. மேலும், சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன்.. நீங்க நேக்கா வெளிய போய்டுங்க என்று எடப்பாடி சொல்வது போலவும், அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, சூப்பர்யா.. நீதான்யா உண்மையான விசுவாசி என்று கூறுவதுபோலவும் அதை அண்ணாமலை எட்டி பார்ப்பது போன்று வாசகங்கள் மற்றும் கார்ட்டூன் படங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

The post `கெட் அவுட் ரவி’: ஈரோடு, திருச்சி, விழுப்புரத்தில் போஸ்டர் appeared first on Dinakaran.

Read Entire Article