திண்டுக்கல், பிப். 10: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை சங்க தொழிலாளர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் ஊதிய உயர்வு கோரிக்கை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு பழநி கூட்டுறவு சங்க பொது மேலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட தலைவர் ஜெகநாதன் வரவேற்றார், மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா வாழ்த்துரை வழங்கினர்.
தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் அன்புக்கரசு, கூட்டுறவு சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் தணிகாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post கூட்டுறவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை appeared first on Dinakaran.