கூடலூர்: கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் ஓரிரு நாட்கள் கோடை மழை பெய்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக கூட மைசூர் தேசிய நெடுஞ்சாலை மாக்குமூலா பகுதியில் காய்ந்த மூங்கில் புதர் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மூங்கில் புதர்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதே சாலையில் மார்த்தோமா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மரம் விழுந்தது. இதில் 2 கார்களின் முன் பகுதி சேதமடைந்தது. இங்குள்ள வாககனங்கள் பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட கார்களின் மீது மரம் விழுந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கூடலூர் பகுதியில் பரபரப்பு; திடீர் மழையால் மரம் விழுந்து கார் சேதம் appeared first on Dinakaran.