கூடலூர் நகராட்சி சார்பில் ஓட்டப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

3 months ago 19

 

கூடலூர் அக்.4: தூய்மை இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொரப்பள்ளி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலருக்குமான ஆறு நபர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி காந்தி ஜெயந்தி விழாவையொட்டி கூடலூர் ஜானகி அம்மாள் அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா தலைமை வகித்தார். ஆணையர் முனியப்பன், பொறியாளர் சாந்தி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஆர்டிஓ செந்தில்குமார், டிஎஸ்பி வசந்தகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

பணப்பரிசாக முதலிடம் ரூ.7000, இரண்டாம் இடம் ரூ.5000, மூன்றாம் இடம் ரூ.3000 மற்றும் கேடயம், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை இந்தியா திட்ட ஊழியர்கள் கிரிஜா, ரஹாரா, ராதிகா மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கூடலூர் நகராட்சி சார்பில் ஓட்டப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article