கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசிலியன் அபராதம் விதித்த ரஷியா

2 months ago 15

மாஸ்கோ,

உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிற்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா- ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வரும் நிலையில், ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது மோதல் போக்கை மேலும் அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ரஷியாவின் அரசு ஊடகம் ஒன்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது யூடியூப் தளத்தில் முடக்கியது.

இதற்கு எதிராக ரஷிய நீதிமன்றத்தில், வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ரஷிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு எதிராக 20 டெசிலியன் அபராதத்தை விதித்து உத்தரவிட்டுள்ளது. 20 டெசிலியன் என்பது, இரண்டுக்கு பின்னால் 33 ஜீரோக்கள் வரும். இது ஒட்டுமொத்த உலக ஜிடிஜியை காட்டிலும் சுமார் 20 கோடி மடங்கு பெரிய தொகையாகும்.இந்த அபராத தொகையுடன் 9 மாதங்களுக்குள் சேனலை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கும் ரஷிய நீதிமன்றம், கூகுள் இதை செய்யத்தவறினால் அபராதம் இரண்டு மடங்கு ஆகும் எனத்தெரிவித்துள்ளது.

Read Entire Article