தூத்துக்குடி, ஜன. 14: வைகுண்டம் அருகேயுள்ள மகிழ்ச்சிபுரம், பருத்திப்பாடு கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வைகுண்டம் அருகேயுள்ள சேரகுளம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் செய்ய சிலர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த இடத்துக்கு அருகே மகிழ்ச்சிபுரம் மற்றும் பருத்திப்பாடு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த இரு கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் இங்குள்ள நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. இப்பகுதியில் கல் குவாரி மற்றும் கிரஷர் நடத்தினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். மேலும், தூசி மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த கல் குவாரியால் சேரகுளம் பகுதியில் 5 கி.மீ., சுற்றளவுக்கு நீர்நிலை, இயற்கை, சுகாதாரம் மற்றும் காற்று ஆகியவை மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். எனவே, இப்பகுதியில் கல் குவாரி மற்றும் கிரஷர் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது appeared first on Dinakaran.